அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா
""""""""""" """""""""""""""""""""""""""""" """""""""""" """"""""""""""""""""
""""""""""" """""""""""""""""""""""""""""" """""""""""" """"""""""""""""""""
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில், ஆடி அமாவாசை அன்று, சைவ சமய பெரியார், "திருநாவுக்கரசர் ", (அப்பர்) பெருமானுக்கு, இறைவன் கயிலைக்காட்சி வழங்கிய அற்புதத் திருநாள்!!!!
இந்த வருடமும், ஆடி அமாவாசையிலே, திருவையாற்றிலே, இறைவன் அப்பருக்கு கயிலாயக்காட்சி வழங்கும் அற்புதமான ஆன்மீகப் பெருவிழாவானது, மிக விமரிசையாக நடைபெற உள்ளது!!!
இந்த வருடம் (23/7/17) ஞாயிற்றுக்கிழமை, அப்பர் கயிலைக்காட்சிப் பெருவிழா நடைபெற உள்ளது.!!!
நிகழ்ச்சி நிரல்
""""""""""""""" """""""""""
காலை 9:00 மணி : -
""""""""""""""" """""""""""
காலை 9:00 மணி : -
ஆலய திருவோலக்க மண்டபத்திலே (உற்சவ புறப்பாடு மண்டபம்), மகா தீபாராதனை, சுவாமி சிவகண வாத்தியம் முழங்க திருவீதியுலா!!
காலை 10:00 மணி :-
ஆலய தெற்கு கோபுர வாயிலின் நேர் எதிரே உள்ள, புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றிலே, அமாவாசை தீர்த்தவாரி!!
மதியம் 12:00 மணி :-
திருவையாறு, மேட்டுத் தெருவில் உள்ள, ஸ்ரீ அபீஷ்ட வரத மஹா கணபதி ஆலய திருக்குளத்திலே, தீர்த்தவாரி!!
( அப்பருக்கு காட்சி கொடுத்த திருக்குளம்)
( அப்பருக்கு காட்சி கொடுத்த திருக்குளம்)
மாலை 6:00 மணி :-
அப்பர் பெருமான், மலர் அலங்காரத்தில், பலகண் தீவட்டியோடு, சிவகண வாத்தியங்கள் முழங்க, பிரம்மாண்டமான வீதியுலா!!!
இரவு 8:00 மணி :-
பஞ்ச மூர்த்திகள், தத்தமது வெள்ளி வாகனங்களில் எழுந்தருள, ஆடிப்பூர அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெறும்!!!
இரவு 8:30 மணி :-
பஞ்சமூர்த்திகள், திருக்குளத்தின் அருகே இருக்கும், உற்சவ கோபுரம் அருகே எழுந்தருளல்!!
நாவுக்கரசப் பெருமான் பாடிய 11 தேவாரப் பாடல்களை அனைவரும் பாடல்,
இரவு 9:00 மணி :-
இறைவன் அப்பர் பெருமானுக்கு கயிலைக்காட்சி அளித்தல்,
இரவு 10:00 மணி :-
கோபுர தரிசனம் முடித்து, பஞ்ச மூர்த்திகள், ஆடிப்பூர அம்பாள், அப்பர் பெருமான் ஆகியோர், திருவையாறு நான்கு மாட வீதிகளிலும், சிவகண வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா!!
"ஆரூரில் பிறந்தால் முக்தி, திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி "
அப்பர் பெருமானோடு, சேர்ந்து நாமும், கயிலைக்காட்சியை தரிசித்து, ஐயாறன் அடிக்கமலம் அடைந்திடுவோம்!!
"அனைவரும் வருக!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ ஐயாறப்பர் அருளை பெறுக!! "
"கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதனக் கண்டேன்!! "
என்றும் இறைபணியில்,
"
திருவையாறு சிவ கணங்கள்
&
T.G.P.seenu
Narayanasami
Siva Muthukumaran
Comments
Post a Comment