திருவையாறு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் உடனமர் ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் ஆலய, "நந்தியம்பெருமான் "ஜனன பெருவிழா "03/04/2017. அன்று, திருவையாறு அந்தனற்குறிச்சியில், காலை ஜனனமும், மாலை ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில், இறைவன் கையால் செங்கோல் கொடுத்தலும், இறைவன் திருக்கையாலே அபிஷேகமும், பட்டாபிஷேகப் பெருவிழாவும் நடைபெறும் .   மறுநாள் 04/04/2017 அன்று, திருவையாறு ஐயாறப்பர் அம்பாளோடு, வெட்டிவேர் பல்லக்கிலும், நந்தியம்பெருமான் குதிரை வாகனத்திலும், கோபுர தரிசனம் கண்டருளி, பின் தில்லைஸ்தானம் வழியாக திருமழபாடி செல்கிறார்.அங்கு அவ்வூர் இறைவன், ஸ்ரீ சுந்தராம்பிகை சமேத ஸ்ரீ வைத்தியநாதர் கண்ணாடி பல்லக்கில் எதிர்கொண்டு அழைத்து, மாலை திருமழபாடி கோவில் வெளியே இருக்கும் திருமண மண்டபத்தில், ஸ்ரீ சுயசாம்பிகா தேவி சமேத ஸ்ரீ அதிகார ருத்ர நந்திகேஸ்வரருக்கு, இரண்டு ஊர் இறைவன் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெறும்.4.4.17- #திருமழபாடி #திருநந்தியெம் #பெருமான் (வசிஷ்ட மகரிஷி பெயர்த்தி) அன்னை #சுயசாம்பிகை #திருக்கல்யாண விழா-8.30-10.30pm(4.4.17-Thirumazhapaadi Nandhiyamperumaan Thirukalyana Vizha-8 to 9 Pm)3.4.17 -இரவு #திருவையாற்றில் #நந்தியெம் #பெருமானுக்கு ஐந்து வகை தீர்த்தால் அபிஷேகம் செய்வித்து #பட்டம் #சூட்டும் #திருவிழா.3.4.17- Thiruvaiyaatril Nandhiyemperumaanukku Pattam Sootum Thiruvizha..4.4.17-இரவு #திருமண #கோலத்தோடு #திருநெய்த்தானம்,#கடுவெளி, #திருமழபாடி #பெரும்புலியூர்,#திருவையாறு என்னும் பஞ்ச பூத தலங்கள் வழியாக திருவையாறுக்கு எழுந்து அருளல்.நந்திதேவர் திருமண தலம் - திருமழபாடி(நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்' என்பது பழமொழி).சிவாயநம..                         என்றும் இறைபணியில்................    திருவையாறு சிவ கணங்கள்.......

















































Comments

Post a Comment

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா