திருவையாறு சித்திரை பெருவிழா- 2018
"""""""""""""""""""""""""""" """"""""""""""""""" """""""""""""""""""""""  """""""""

    திருக்கயிலாயப் பரம்பரை #தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு #ஸ்ரீ #தர்மசம்வர்த்தினியம்பாள் உடனாகிய #ஸ்ரீ #பஞ்சநதீஸ்வர #சுவாமி ஆலய,

 ( சித்திரை சப்தஸ்தானப் பிரம்மோற்சவம்)

   "#செண்டாடும் #புனற்பொன்னிச் #செழுமணிகள் #வந்தலைக்கும் #திருவையாறு " எனத் திருஞானசம்பந்தப் பெருமானால் புகழப் பெற்ற இத்தலம் #காவேரி வடகரைத் தலங்களுள் சிறந்தது!!!

இது #ஐயாறு, #பஞ்சநதம், #பூலோகக்கயிலாயம் என பல பெயர்களையுடையது!!!


 #தலப்பெருமை :
  """"""""""""""""""""""""""""   
@ இங்கு #தென்கயிலாயம், #வடகயிலாயம் என இரு கயிலாயங்கள் உடையது!!!

 @ இங்குள்ள மூலவர் ஸ்ரீ ஐயாறப்பர் #சுயம்புமூர்த்தி!!! 

@ #திருநந்திதேவர் அவதரித்த திருத்தலம்,

@ #சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு #காவிரி நதி  ஓட்டமற்று வழிவிட்ட தலம்,

@ பெருமான் #தன்னைத்தானே #பூசித்துக் கொண்ட தலம்,

@ #ஐயாறதனில் #சைவனாகியும் என இவ்வற்புதத்தை மாணிக்கவாசகப் பெருமானே போற்றியிருக்கிறார்!! 

@ #அப்பர் பெருமானுக்கு இறைவன் கயிலைக்காட்சி வழங்கிய தலம் !!!

      இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் வருடந்தோறும், உலகப்புகழ்பெற்ற,
"சித்திரை சப்தஸ்தானப் பிரம்மோற்சவம் " சிறப்பாக நடைபெறும்!!

      இந்த வருடம் இத்திருவிழா வருகிற (20/04/18) முதல் (02/05/18) முடிய ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருவருளாலும்,

   எங்கள் தருமை குருமணிகள், இளைய குருமணிகளின் குருவருளாலும், சிறப்பாக நடைபெற உள்ளது!!!

   
                    

20/04/18 முதல் 02/04/18 வரை!!!

பக்தகோடிகள், அடியார் பெருமக்கள், புடைசூழ 


13 நாட்களும் நம்மைக் காண ஐயாறப்பரே  வருகிறார்!!! 

         அனைவரும் வருக!! ஐயாறப்பர் அருளைப் பெறுக!!

      
                             என்றும் இறைபணியில்,
                      திருவையாறு சிவ கணங்கள்
                                              &
                                  "ஐயாறனடிமை"
                                    Narayana Sami
                                   Siva Muthukumaran







Comments

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா