நந்தியம்பெருமான் பட்டாபிஷேகம் திருக்கல்யாண வைபவம்

நந்தியம்பெருமான் பட்டாபிஷேகம்

     உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புத நிகழ்வு!!!

     (25/03/18) அன்று காலை அந்தணர்புறத்தில் ஸ்ரீ நந்தியம்பெருமான் ஜனனமும்,  திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில்,உள்ள திருவோலக்க மண்டபத்திலே,  ஸ்ரீ சுயசாம்பிகை சமேத ஸ்ரீ அதிகார ருத்ர நந்திகேஸ்வரருக்கு, அபிஷேகமும், 

   1)சிவ கணங்களுக்குத் தலைமை பதவியும்,
   2)முதன்மைத் திருவாயிலில் இருந்து காவல் செய்யும் பணியையும்,
   
     அளிக்கும் பொருட்டு, #பட்டாபிஷேகமும், #செங்கோல் #கொடுத்தலும் நடைபெற்றது!!! 

     அதனைத் தொடர்ந்து  சுவாமி #வெள்ளி #படிச்சட்டத்திலும், அம்பாள் #மர #படிச்சட்டத்திலும், ஸ்ரீ சுயசாம்பிகை சமேத ஸ்ரீ அதிகார ருத்ர நந்திகேஸ்வரர் #விமானத்திலும் எழுந்தருள மஹா தீபாராதனையோடு  புறப்பாடு நடைபெற்றது!!!

    


    (26/03/18)அன்று  காலை 6:15 மணியளவில் திருவையாற்றில் இருந்து ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி உடனுறை ஸ்ரீ ஐயாறப்பர் பெரிய #விசித்திர #வெட்டிவேர் #பல்லக்கிலும்,  

மணப்பெண்ணாம் ஸ்ரீ சுயசாம்பிகை சிறிய #வெட்டிவேர் #பல்லக்கிலும்,

 ஸ்ரீ நந்தியெம்பெருமான் அழகிய குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை, வெள்ளிச் செங்கோல், வெண்பட்டாடையில் கம்பீரமாக மாப்பிள்ளைக் திருக்கோலத்தில் காலை 6.15 மணியளவில், தன் பக்தனுக்கு திருமணம் செய்துவைக்கும் பொருட்டு, திருமழபாடிக்கு புறப்பட்டு சென்றார் ஸ்ரீ ஐயாறப்பர்!!!

      அரியலூர் மாவட்டம், திருமழபாடியில்  (26/03/18) அன்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்ற #ஸ்ரீ #நந்திகேசுவரர் திருமண வைபவத்திற்கு, நேற்று காலை திருக்கோவிலில் இருந்து, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல் வழியாக மதியம் #கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு #ஸ்ரீ #அறம் #வளர்த்த #நாயகி உடனாகிய #ஸ்ரீ #ஐயாறப்பர் விசித்திர வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளியவுடன் #திருமழபாடி இறைவன் #ஸ்ரீ #சுந்தராம்பிகை சமேத #ஸ்ரீ #வைத்தியநாத #சுவாமி, கண்ணாடி பல்லக்கில் எதிர்கொண்டு அழைத்தார்!!!

     இரவு மணப்பெண் #ஸ்ரீ #சுயசாம்பிகை சிவகண வாத்தியம் முழங்க திருமணப் பந்தலுக்கு எழுந்தருளிய பின், 

 எங்கள்  தருமை இளைய சந்நிதானமும் ஆகிய,
#ஸ்ரீ #ல #ஸ்ரீ #மாசிலாமணி #தேசிக #ஞானசம்பந்த #பரமாச்சாரிய #சுவாமிகள் எழுந்தருள

    ஸ்ரீ சுயசாம்பிகை சமேத ஸ்ரீ அதிகார ருத்ர நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், அதனைத் தொடர்ந்து,

  "ஐயாறா " "ஆரூரா" கோஷங்கள் விண்ணதிர, மேள வாத்தியங்கள், சிவகண வாத்தியங்கள், வேத மந்திரங்கள் வாணைப் பிளக்க, 

  ஸ்ரீ ஐயாறப்பர், ஸ்ரீ வைத்தியநாதர் முன்னிலையில்,

   இரவு 8:45 மணியளவில் #திருக்கல்யாண #வைபவம் சிறப்பாக நிகழ்ந்தேறியது!!

   பல லட்சம் பக்தர்கள் இந்நிகழ்வினைக் காண, திருமழபாடியில் குவிந்தனர்!!

    பின்னர் புதுமணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு இன்று ஐயாறு வந்தடைந்தார் ஐயாறப்பர்!!!

  
                  
                           என்றும் இறைபணியில்,
                      திருவையாறு சிவ கணங்கள்
 






























































































































































































Comments

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா