திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா
திருவையாறு திரு நந்திதேவர்ஜனனப்பெருவிழா திருவையாறு ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயிலில், வருடந்தோறும், பங்குனி மாதத்தில் நந்திகேஸ்வரர் திருவையாறு திருத்தலத்தில் பிறந்த ஐதீக விழாவை எடுத்துக்காட்டும் நிகழ்வாக, நந்திகேஸ்வரர்ஜனனப்பெருவிழா சிறப்பாக நடைபெறும்!!! இந்த வருடம், இன்றைய தினம் (15/03/19) காலை, சுவாமி, அம்பாள் ஏகாசனத்தில் புறப்பாடாகி, அந்தணர்குறிச்சி ஸ்ரீரிஷிநந்தி_விநாயகர் கோயிலுக்கு, எழுந்தருளிய பின், ஜனன பூமியில், திருமண் எடுத்து, குழந்தையாக பிறந்த நந்திகேஸ்வரருக்கு, அபிஷேகம், நடைபெற்று, தீபாராதனை நடைபெற்று, ராஜ வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தார்!! இன்று மாலை திருக்கோவிலில் திருவோலக்கமண்டபத்தில், ஸ்ரீசுயசாம்பிகை சமேத ஸ்ரீ_நந்திகேஸ்வருக்கு, பட்டாபிஷேகமும், செங்கோல் கொடுக்கும் வைபவமும், நடைபெறும்!! அனைவரும் வருக!! ஸ்ரீ நந்திகேஸ்வரர் அருள் பெறுக!! என்றும் இறைபணியில்..... திருவையாறு சிவ கணங்கள் தி...
Comments
Post a Comment