நந்தியம்பெருமான் பட்டாபிஷேகம் திருக்கல்யாண வைபவம்
நந்தியம்பெருமான் பட்டாபிஷேகம் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புத நிகழ்வு!!! (25/03/18) அன்று காலை அந்தணர்புறத்தில் ஸ்ரீ நந்தியம்பெருமான் ஜனனமும், திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில்,உள்ள திருவோலக்க மண்டபத்திலே, ஸ்ரீ சுயசாம்பிகை சமேத ஸ்ரீ அதிகார ருத்ர நந்திகேஸ்வரருக்கு, அபிஷேகமும், 1)சிவ கணங்களுக்குத் தலைமை பதவியும், 2)முதன்மைத் திருவாயிலில் இருந்து காவல் செய்யும் பணியையும், அளிக்கும் பொருட்டு, #பட்டாபிஷேகமும், #செங்கோல் #கொடுத்தலும் நடைபெற்றது!!! அதனைத் தொடர்ந்து சுவாமி #வெள்ளி #படிச்சட்டத்திலும், அம்பாள் #மர #படிச்சட்டத்திலும், ஸ்ரீ சுயசாம்பிகை சமேத ஸ்ரீ அதிகார ருத்ர நந்திகேஸ்வரர் #விமானத்திலும் எழுந்தருள மஹா தீபாராதனையோடு புறப்பாடு நடைபெற்றது!!! (26/03/18)அன்று காலை 6:15 மணியளவில் திருவையாற்றில் இருந்து ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி உடனுறை ஸ்ரீ ஐயாறப்பர் பெரிய ...